தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் - 5 பேர் பலி

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-10 09:34 GMT
டஷன்பி,

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ரஷீத் நகரின் தெற்கு கிழக்கு பகுதியில் 27 கிலோமீட்டர் தொலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் குஜட் நகரில் இருந்து தென்கிழக்கே 153 கிலோமீட்டர் தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக மத்திய தரைக்கடல் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தஜிகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்