ஸ்பெயின் நாட்டில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 18:51 GMT
கோப்புப்படம்
மாட்ரிட், 

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைவான அளவே பதிவாகி வந்தது. 

இந்நிலையில் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,15,084 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 033 ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 36 லட்சத்து 52 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,81,471 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்