இங்கிலாந்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 24,950 பேருக்கு தொற்று

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-26 17:05 GMT
கோப்புப்படம்
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வந்த டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. தடுப்பூசிகள் செலுத்தப்படும்வேகம் அதிகரிப்பால், தற்போது கொரோனா பரவல் படிபடியாக குறைய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,950 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 57,22,298 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44 லட்சத்து 59 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,33,895 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்