மலேசியாவில் புதிதாக 17,150 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 160 பேர் பலி

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-02 00:57 GMT
கோப்புப்படம்
கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,30,422 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக 160 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,184 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 11,326 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 9,25,965 குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,95,273 பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்