ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பயணிகளுக்கான தடை நீக்கம்

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-08-03 22:38 GMT
அபுதாபி,

இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு ஒரு சில நாடுகளில் தற்காலிக தடை விதித்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை ஆகஸ்ட் 5(நாளை) முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும் ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அமீரகத்திற்கு வருகை தரும் இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்