ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு: தலீபான்கள் அறிவிப்பு

பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2021-08-17 06:03 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.

அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது.  தாங்கள் அச்சத்துடனே இருப்பதாக ஆப்கானிஸ்தானியர்கள் பேட்டி அளிக்கும் காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.  

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.  பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்