தெற்கு சாண்ட்விச் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம்

தெற்கு சாண்ட்விச் தீவுகள் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-22 01:55 GMT


விர்ஜீனியா,

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்