’மிஷின் இம்பாசிபிள் 7' படப்பிடிப்பின்போது திருடுபோன டாம் க்ரூஸ் கார்...!

மிஷின் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பின்போது டாம் க்ரூஸ் கார் திருடுபோனது.

Update: 2021-08-27 18:24 GMT
லண்டன், 

உலக முழுவதும் நன்றாக ஓடி வசூலை வாரிகுவித்த ஹாலிவுட் படங்களில் மிகவும் முக்கிய இடத்தில் இருக்கும் படம் மிஷன் இம்பாஷிபிள். இந்த படத்தின் ஏழாவது பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 என்ற கார் திருப்பட்டது. மேலும்  ஆயிரம் பவுண்ட்ஸ் மதிப்புள்ள அவரது  உடமைகள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அங்குள்ள பர்மிங்காம் பகுதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டாம் க்ரூஸின் வாகனத்தில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டதால் காவல்துறையினர் வாகனத்தை மீட்டனர். கார் மீட்கப்பட்டு இருந்தாலும் அதில் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்