பாகிஸ்தானில் கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

பாகிஸ்தானில் கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-29 22:16 GMT
கோப்புப்படம்
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,909 பேருக்கு கொரேனாா பாதிப்பு உறுதியானது. 69 பேர் கொரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். இந்த நிலையில் தொற்று பரவலைக்கட்டுப்படுத்த தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அங்கு 13 நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மேலும் 14 நகரங்களுக்கு கட்டுப்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நகரங்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து.

இந்த கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி அத்தியாவசிய சேவைகளான பலசரக்கு கடைகள், மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 8 மணிக்கு மூடப்படும்.

27 நகரங்களிலும் சந்தைகள் வாரத்தில் 2 நாட்கள் மூடப்படும். மண்டபங்களில் நடத்துகிற திருமணங்கள், சினிமா தியேட்டர்கள், உல்லாச பூங்காக்கள், நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள், 50 சதவீத மாணவர்களுடன் அனுமதிக்கப்படும்.

மேலும் செய்திகள்