போதை பொருள் கடத்தல்: எகிப்தில் 7 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை

எகிப்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-07 09:31 GMT
கோப்பு படம்

கெய்ரோ,

எகிப்து நாட்டில் செங்கடல் வழியே 2 டன் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது.  இதன் மதிப்பு 1,167 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.  இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில், இதுபற்றிய விசாரணையில் எகிப்து கோர்ட்டு, வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.  இதேபோன்று 2 எகிப்தியர்கள் மற்றும் ஈரானியர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையிலான அனைவரிடமும் போதை பொருள் பதுக்கி இருந்தது கண்டறியப்பட்டது.  அந்த நாட்டில் மரண தண்டனை வழங்கப்படுவது சட்டப்பூர்வ ஒன்றாக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் 44 பேர், 2017ம் ஆண்டில் 35 பேர், 2018ம் ஆண்டில் 43 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்