தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.

Update: 2021-09-11 06:52 GMT
மாஸ்கோ, 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைக்க உள்ளனர். 

ஆட்சி பொறுப்பேற்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் விவரங்களை அண்மையில் வெளியிட்டனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி, தலீபான்களின் புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.  ஆனால், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்