அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 13 கொரில்லாவுக்கு கொரோனா தொற்று!

அமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 19 கொரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-11 12:19 GMT
வாஷிங்டன்,

சீனாவின்  உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நெருங்கி விட்ட போதிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.46 கோடியைக் கடந்துள்ளது. 

இந்தநிலையில்  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் உள்ள கொரில்லாக்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு லேசான இருமல் மற்றும் ஜலதோஷம் போன்ற சில அறிகுறிகள் இருப்பதாஅ கூறப்படுகிறது. இதுவரை 13 கொரில்லாக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 19 கொரில்லாக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்