ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

Update: 2021-09-11 20:58 GMT
இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் விமான சேவையை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த விமான சேவைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து விட்டதாக பாகிஸ்தான் பன்னாட்டு விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்