வங்காளதேசத்தில் 543 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன

உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.

Update: 2021-09-12 09:42 GMT
டாக்கா, 

கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் வங்காளதேசத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்டன. உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது. இதனால், ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில், வங்காளதேசத்தில் தொற்று பரவல் குறைந்ததோடு தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து 543 நாட்களுக்குப் பிறகு வங்காளதேசத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் முக மலர்ச்சியோடு பள்ளிகளுக்கு வருகை தரும் காட்சிகள் உள்ளூர் செய்தி சேனல்களில் வெளியாகின. சில இடங்களில்  பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொடுத்து வரவேற்றனர். 

மேலும் செய்திகள்