பிரேசிலில் 34,407 பேருக்கு கொரோனா பாதிப்பு; 643 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 34,407 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

Update: 2021-09-17 02:37 GMT
பிரேசிலியா,

பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் (வியாழ கிழமை நிலவரப்படி) 34,407 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த பாதிப்புகள் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 ஆக உயர்வடைந்து உள்ளது.  நாடு முழுவதும் 643 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,89,240 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதற்கு முந்தின தினம் 14,780 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.  800 பேர் உயிரிழந்து இருந்தனர்.



மேலும் செய்திகள்