சீனாவில் இருந்து பிரான்ஸ் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீர் தீ விபத்து

சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-09-18 07:01 GMT
பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி இன்று காலை பயணிகளுடன் ஏர்பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சத்தத்தை தொடர்ந்து விமானத்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது. இந்த வெடிவிபத்து விமானத்தின் வால்பகுதியில் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்தையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இதனால், பெரும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.   

இந்த தீ விபத்தில் விமானத்தின் ஒரு இருக்கை சேதமடைந்திருப்பதை அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து பிரான்ஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் சீன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்