பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி: பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!

பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-09-19 22:30 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் லால் மஸ்ஜித் என்ற பள்ளிவாசலின் அருகில் இருக்கும் இஸ்லாமிய மதப்பள்ளிகூடத்தில் தலிபான்கள் கொடி ஏற்றப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த கொடியை அங்கிருந்து நீக்க முயற்சித்தனர். 

ஆனால் அந்த பள்ளிவாசலின் மதகுருவான மவுலானா அப்துல் அஜீஸ், கொடியை நீக்கவிடாமல் தடுத்ததோடு காவல்துறையினரை மிரட்டியதாகவும், பாகிஸ்தானில் இருக்கும் தலீபான்களை உங்களை தாக்குவார்கள் என்று எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தப் பள்ளிவாசலின் வெளியில் மதகுருவுடன் சேர்ந்து மாணவர்களும் கொடியை நீக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து மதப்பள்ளிக்கூடத்தில் தலீபான்கள் கொடி ஏற்றப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக லால் மஸ்ஜித்தின் மத குரு மவுலானா அப்துல் அஜிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சில மாணவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்