உலகளவில் 23,02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் 23,02 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

Update: 2021-09-22 01:23 GMT
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்,  உலகளவில் 23,02 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.  இதுவரை 47.21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20.69 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் புதிதாக 1,17,118 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 1,861 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 4.32 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 6,96,819 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்