ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்

ஆஸ்திரேலியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

Update: 2021-09-22 11:30 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் இன்று காலை 9 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் மென்ஸ்ஃபீல்ட் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த அடைந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் மெல்போர்ன் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் மிகுந்த சேதமடைந்தன.

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று என்பதால் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்