ரஷியா: பனிப்புயலில் சிக்கி மலையேறும் வீரர்கள் 5 பேர் பலி

ரஷியாவில் பனிப்புயலில் சிக்கி மலையேறும் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-09-24 10:40 GMT
மாஸ்கோ,

ரஷியாவின் தெற்கு கல்ஹசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலைச்சிகரம் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள மிகவும் உயரமான மலைச்சிகரம் இதுவாகும். இந்த மலைச்சிகரத்தில் ஏறுவதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், 19 பேர் கொண்ட குழு எல்பர்ன்ஸ் மலைச்சிகரத்தில் மலையேறினர். 5 ஆயிரம் மீட்ட உயரத்தில் குழுவினர் மலையேறிக்கொண்டிருந்தபோது திடீரென பனிப்புயல் வீசியது.

இந்த பனிப்புயலில் மலையேறும் வீரர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். இந்த பனிப்புயலில் சிக்கி மலையேறும் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய மலையேறும் வீரர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் பனிப்புயலில் சிக்கி காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து பனிப்புயல் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். மேலும், பனிப்புயலில் சிக்கிய எஞ்சிய மலையேறும் வீரர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் என 14 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் இந்த பனிப்புயல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்