ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை மீறினால் தண்டனை - தலீபான்கள் அறிவிப்பு

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-09-27 12:31 GMT
image courtesy: Getty Images
காபூல்

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

இந்த நிலையில் புதிய ஆட்சி  அமைத்துள்ள தலீபான்கள் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்து உள்ளனர்.  

தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை தலீபான்கள் விதித்து உள்ளனர். முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என  ஆப்கானிஸ்தானில்  தலீபான்கள் புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளனர்.

முடிதிருத்தும் கலைஞர்களுக்கு  முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலீபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.  இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தலீபான் அரசின் மத போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கு தலீபான்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தலைமுடி மற்றும் தாடியை வெட்டும்போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் புகார் சொல்வதற்கான உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று ஹெராத் மாகாணத்தில் ஆள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பொது வெளிகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்