கொரோனா அவசர நிலை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்: ஜப்பான் அறிவிப்பு

ஜப்பானில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவிக்கத் தொடங்கியுள்ளது.

Update: 2021-09-28 09:14 GMT
டோக்கியோ, 

ஜப்பானில் கொரோனா பெருந்தொற்று வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜப்பான் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், வரும் வியாழன் முதல் ஜப்பானில் கொரோனா அவசர நிலை நடவடிக்கைகள்  முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார். ஜப்பானில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்