ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-10-05 13:24 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு நகரமாகிய பைசாபாத் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியிலிருந்து சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்நிலநடுக்கம் 1.37 நீளமும் 150 கிலோ மீட்டர் ஆழமும் கொண்டிருந்ததாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்