கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்- உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் இறுதி முடிவு

வசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

Update: 2021-10-06 02:49 GMT
ஜெனீவா, 

இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடுப்பூசிக்கு  உலக சுகாதார  அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.  அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதற்காக சோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்பித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு இன்னும் தடுப்பூசிக்கு  அங்கீகாரம் அளிக்கவில்லை. 

இந்த நிலையில்,  கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கோவேக்சின் தரமானதா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்