தொடர்ந்து 14 வது ஆண்டாக இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி

தொடர்ந்து 14 வது ஆண்டாக போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

Update: 2021-10-07 11:34 GMT
நியூ ஜெர்ஸி,

இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 100 பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 14 வது ஆண்டாக இடம்பிடித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
  
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 வரை தொடர்ந்து 14 வது ஆண்டாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை அவர் பெற்றுள்ளார்.

பட்டியலில் அடுத்ததாக 74.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார் 31 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவி சாவித்திரி ஜிண்டால் 18 பில்லியன் டாலர்களுடன்  மீண்டும் முதல் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்