உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது முறையாக முதலிடம் பிடித்தார் ஜெப் பெசோஸ்

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

Update: 2021-10-07 12:33 GMT
நியூ ஜெர்ஸி,

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் வெளியிட்டு உள்ளது.

அவரைத் தொடர்ந்து 151 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளார். மேலும் மூன்றாவது இடத்தில் 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்சை சேர்ந்த எல்விஎம்எச் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உள்ளார்.

2 வது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 124 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 4 வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு உலக பணக்கார்ர்கள் பட்டியலில் 21 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு 10 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்