ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தனது தூதரை அனுப்பிய பிரான்ஸ்: வெளியுறவு மந்திரி வரவேற்பு

மீண்டும் தனது தூதரை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள பிரான்சுக்கு ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-07 22:24 GMT
கோப்புப்படம்
மெல்போர்ன், 

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், பிரான்சுக்கு பின்னடைவாக அமைந்தது. பிரான்சிடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. 

இதனால் அதிருப்தி அடைந்த பிரான்ஸ், ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதரை திரும்ப வரவழைத்தது. இந்நிலையில் தற்போது அந்த தூதரை பிரான்ஸ் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மாரிஸ் பெய்ன் வரவேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்