நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.3 % ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவிகிதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

Update: 2021-10-08 10:22 GMT
புதுடெல்லி,

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி  8.3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க ஊக்கச் சலுகை உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகும் என்றுஉலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் 2020-23 ஆம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் 3 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் 2021-22 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவிகிதமாகவும், மாலத்தீவுகளின் ஜிடிபி 22.3 சதவிகிதமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. 

மேலும் செய்திகள்