இந்தோனேசியாவின் பாலி தீவில் 4.8 ரிக்டரில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-10-16 15:33 GMT
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த  நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாலி தீவிலுள்ள பன்ஜார் வாங்சியனைத் தாக்கியதாகவும், அதன் ஆழம் 10 கிமீ (6.21 மைல்) என்றும் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சேதம் குறித்த தகவல்கள்  சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரி கெடே தர்மடா தெரிவித்தார்.

பாலியின் மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் லோம்போக் தீவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்