படப்பிடிப்பு முடிந்து விண்வெளியில் இருந்து திரும்பியது ரஷிய படக்குழு

விண்வெளியில் வைத்து படமெடுக்க சென்ற ரஷிய படக்குழு படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று பூமிக்கு திரும்பினர்.

Update: 2021-10-17 07:18 GMT
மாஸ்கோ,

சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில்  ரஷிய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ ஆகியோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர்.

"தி சேலன்ஜ்"  என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் கதை என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5-ந் தேதி சோயுஸ் எம்எஸ் -19 என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இவர்கள் 12 நாட்கள் விண்வெளியில் தங்கி படப்பிடிப்பு நடத்தினர். இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு முடிந்து படக்குழு பூமிக்கு திரும்பி உள்ளனர். கஜகஸ்தான் நேரப்படி இன்று அதிகாலை 12 மணி 35 நிமிடத்தில் அவர்கள் தரையிறங்கி உள்ளனர்.

படக்குழு மட்டும் பூமிக்குத் திரும்பியுள்ள நிலையில் விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் ஷ்காப்லெரோவ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்