அழுவதற்கென்றே தனி அறை - ஸ்பெயினில் வினோதம்

மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 06:39 GMT
ஸ்பெயின்,

'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக இந்த அழுகை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் ஒரு மூலையில் தொலைபேசிகள் உள்ளன, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆறுதல் பெறும் வகையில் இந்த அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த வாரத்தில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநல பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார். இதற்காக 100 மில்லியன் யூரோ நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்தார். இதில் 24 மணி நேர தற்கொலை தடுப்பு உதவி சேவை போன்ற சேவைகளும் அடங்கும்.

2019 ஆம் ஆண்டில், ஸ்பெயினில் 3,671 பேர் தற்கொலை காரணமாக இறந்துள்ளனர். அரசாங்கத் தரவுகளின்படி, 10 இளைஞர்களில் ஒருவர் மனநல பிரச்சினையுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5.8 சதவீதம்  பேர் கவலையால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்