அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.

Update: 2021-10-18 22:20 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் 65-வது வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டவர் கொலின் பவுல். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் 2001 முதல் 2005 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார். இவர் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த காலத்தில் தான் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. கொலின் பவுல் அமெரிக்கா முப்படைகளின் தலைமை தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 

84 வயதான கொலின் பவுல் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளார். 
 
இதற்கிடையில், கொலின் பவுலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொலின் பவுல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் உயிரிழந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்