நியூசிலாந்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

நியூசிலாந்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-10-21 23:25 GMT
வில்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டில் இன்று காலை 10.58 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடங்கு தீவுகளில் ஒன்றான தமருனி மாகாணம் கிங் கண்ட்ரி நகரில் 210 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நியூசிலாந்து பிரதமர் ஜெசிகா நாட்டில் நிலவி வரும் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துக்கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்