நைஜீரியா: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Update: 2021-10-23 00:13 GMT
அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமிக் ஸ்டேட் இன் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பு நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அபு முசப் அல் பர்னாவி செயல்பட்டு வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நைஜீரிய படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் இன் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்) அமைப்பின் புதிய தலைவராக மளம் போகோ என்பவர் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவரான மளம் போகோவை நைஜீரிய பாதுகாப்பு படையினர் கடந்த வார தொடக்கத்தில் சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை நைஜீரிய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் பபாஹூனா மங்குனா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்