பாகிஸ்தானில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 10 கோடி

பாகிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-10-25 00:27 GMT

லாகூர்,

பாகிஸ்தானில் 12.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 12.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனா்.  28,377 பேர் உயிரிழந்துள்ளனா்.  கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மக்கள்தொகையில் 20 சதவீத இலவச தடுப்பூசிகளை வழங்க ஐ.நா. உறுதியளித்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த பிப்ரவரி 2ந்தேதி தொடங்கியது. இதுவரை சுமாா் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில், 17.5 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனா்.

மேலும் செய்திகள்