சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சீன தலைநகரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2021-10-28 20:25 GMT
பீஜிங்,

சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றியது. இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று பரவி இருக்கிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. ஏற்கனவே இந்த தொற்று பாதிப்புக்கு ஆளான குழந்தைகள், 6 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச்சுக்குள் தொடங்கி விடும் என தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்