இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் சுமத்ராவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-01 23:26 GMT
கோப்புப்படம்
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சினாபாங் நகருக்கு தெற்கே சுமார் 255 கிலோமீட்டர் தொலைவில் ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் கடலோரத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரனமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நில தட்டுகள் ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்