உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.68 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-11-30 01:37 GMT
கோப்புப்படம்
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,23,31,631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 23 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,41,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,328 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 4,92,67,877,   உயிரிழப்பு -8,01,049,    குணமடைந்தோர் - 3,90,01,529 
இந்தியா        -  பாதிப்பு - 3,45,83,597,  உயிரிழப்பு -  4,68,790,   குணமடைந்தோர் - 3,40,08,183
பிரேசில்        -  பாதிப்பு - 2,20,84,749,  உயிரிழப்பு -  6,14,428,  குணமடைந்தோர் - 2,13,04,115 
இங்கிலாந்து- பாதிப்பு -  1,01,89,059,  உயிரிழப்பு -  1,44,810,  குணமடைந்தோர் -  90,25,773
ரஷ்யா           -  பாதிப்பு -   96,04,233,   உயிரிழப்பு -  2,73,964,   குணமடைந்தோர் -   82,95,811     

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        - 87,70,372
பிரான்ஸ்     -  76,28,327
ஈரான்          - 61,13,192
ஜெர்மனி         - 58,25,543
அர்ஜெண்டினா- 53,28,416
ஸ்பெயின்       - 51,53,923
கொலம்பியா -  50,67,348
இத்தாலி          - 50,15,790
இந்தோனேசியா- 42,56,112
மெக்சிகோ     - 38,83,842

மேலும் செய்திகள்