சம்பளம் இல்லாமல் உங்களுக்கு எவ்வளவு நாள் வேலை செய்வது? - இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் தூதரகம் கேள்வி

சம்பளம் இல்லாமல் உங்களுக்கு எவ்வளவு நாள் வேலை செய்வது? என செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் இம்ரான்கானுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-12-03 07:32 GMT
பல்ஹிரேட்,

சம்பளம் இல்லாமல் உங்களுக்கு எவ்வளவு நாள் வேலை செய்வது? என செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இம்ரான்கானுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பாக, செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பதிவில், பணவீக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ளபோது, அரசு ஊழியர்களான நாங்கள் எவ்வளவு நாட்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?.

இம்ரான்கான் (பாக்.பிரதமர்) உங்களுக்காக நாங்கள் கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வெலை செய்துகொண்டிருக்கிறோம். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தான் புதிய பாகிஸ்தானா? என்னை மன்னித்துவிடுங்கள் இம்ரான்கான். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரியே தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த நாட்டு தூதரகமே பிரதமருக்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சம்பவம் பாகிஸ்தான் அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


மேலும் செய்திகள்