இலங்கைக்கும் பரவியது ஒமைக்ரான் கொரோனா

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ளது.

Update: 2021-12-03 10:15 GMT
கொழும்பு,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

அனைத்து நாடுகளிலும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், மின்னல் வேகத்தில் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான்  கால் பதித்து வருகிறது. இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய நபர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒமைக்ரான் வகை கொரோனா என உறுதி செய்யப்பட்டு  இருக்கிறது. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்