மெக்சிகோ: சரக்குலாரி விபத்தில் 53 புலம்பெயர்ந்தோர் பலியான சோகம்

மெக்சிகோவில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-12-10 03:45 GMT
மெக்சிகோ,

மெக்சிகோவில் நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி சரக்கு லாரி ஒன்று கிட்டத்தட்ட 107 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிபாராதவிதமாக ஒரு பாலத்தில் மோதியதில் 53 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையின் காரணமாக புலம்பெயர்ந்தோர் பொதுவாக அமெரிக்க எல்லையை அடைய மெக்சிகோ வழியாக நடைபயணம் மேற்கொள்கின்றனர், மேலும் சில சமயங்களில் மிகவும் ஆபத்தான முறையில் கடத்தல்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய லாரிகளில் ஏறுகின்றனர். அவர்கள் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சியாபாஸ் மாநிலத்தில் உள்ள டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு வெளியே அருகே உள்ள ஆபத்தான வளைவினை கடக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக சியாபஸ் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லுரிஸ் மனுவெல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்