2022ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-16 08:33 GMT
Image courtesy:news.cgtn.com
டோக்கியோ,

சீன தலைநகர் பீஜிங் நகரில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் கிஷிடா கூறியதாவது, 

“இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டியது முக்கியமான விஷயம். தேச நலனுக்காக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்  உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் திட்டம் ஏதுமில்லை” என்று தெரிவித்தார்.

சீனாவின் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு எதிர்வினையாக அடுத்த ஆண்டு பீஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை துறை ரீதியாக புறக்கணிக்கப் போவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது.இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை தொடர்ந்து, ஜப்பான் உள்பட ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளும் சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்