ஆப்கானிஸ்தான்: பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மாணவன் பலி; 13 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.;
கந்தகார்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் பழைய வீடு ஒன்றில் ஹம்சா அல் நோரியா மதராசா என்ற பெயரில் பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு வகுப்பறையின் மேற்கூரை திடீரென நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவன் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதன்பின், அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.