இந்தோனேசியாவில் குரோக் செயற்கை நுண்ணறிவு சேவைக்கு தடை

இது சட்டம் மற்றும் கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.;

Update:2026-01-12 07:24 IST

ஜகார்த்தா,

உலக பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூகவலைதளத்துடன் இணைந்து குரோக் செயற்கை நுண்ணறிவு சேவை செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான இந்த குரோக்குக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரோக் செயற்கை நுண்ணறிவானது பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இது சட்டம் மற்றும் கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.

இதனால் பெண்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே குரோக் செயற்கை நுண்ணறிவு சேவைக்கு தடை விதித்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதன்மூலம் குரோக் செயற்கை நுண்ணறிவுக்கு தடை விதித்துள்ள முதல் நாடாக இந்தோனேசியா மாறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்