கென்யாவில் நாடாளுமன்றத்தில் இனிப்பு வழங்கிய எம்.பி. இடைநீக்கம்..!

கென்யாவில் நாடாளுமன்றத்தில் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கிய எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-01-06 20:19 GMT
நைரோபி,

கென்யா நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் நடந்தது. இந்த நேரத்தில் பாத்திமா கெடி என்ற பெண் எம்.பி., சக எம்.பி.க்களுக்கு இனிப்பு (லாலிபப்) வழங்கினார். இது சர்ச்சையானது.

இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது, “நீண்டதொரு விவாதம் நடந்ததால் எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. எனவேதான் நான் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கினேன்” என கூறினார்.

ஆனால் இதை ஏற்காத சபாநாயகர் அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதே பெண் எம்.பி. தனது வீட்டின் மாடியில் லஞ்சத்தை பணமாக வினியோகித்தார் என்று சக எம்.பி. என்திண்டி நியோரோ குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் அவரால் அதை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. இதற்காக அவர் 2 நாள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்