உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30.37 கோடியை தாண்டியது...!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.82 கோடியை தாண்டி பதிவாகி உள்ளது.

Update: 2022-01-08 02:34 GMT
கோப்புப்படம்
ஜெனிவா, 

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30.37 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,37,81,056 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,82,35,948 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 97 ஆயிரத்து 048 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 4,00,48,060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,197 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 6,04,64,426, உயிரிழப்பு -  8,58,346, குணமடைந்தோர் - 4,21,72,251
இந்தியா  -    பாதிப்பு -  3,53,67,760, உயிரிழப்பு -  4,83,193, குணமடைந்தோர் - 3,44,00,096
பிரேசில்   -    பாதிப்பு -  2,24,50,222, உயிரிழப்பு -  6,19,878, குணமடைந்தோர் - 2,15,67,845
இங்கிலாந்து- பாதிப்பு - 1,41,93,228, உயிரிழப்பு - 1,49,744, குணமடைந்தோர் - 1,06,68,648
பிரான்ஸ்      - பாதிப்பு -  1,15,11,452, உயிரிழப்பு - 1,25,206, குணமடைந்தோர் - 84,52,170

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 1,06,18,035
துருக்கி - 98,50,488
ஜெர்மனி - 74,58,396
ஸ்பெயின் - 71,64,906
இத்தாலி - 70,83,762
ஈரான்  -  62,04,224
அர்ஜெண்டினா - 61,35,836
கொலம்பியா - 52,68,862
இந்தோனேசியா - 42,65,187
போலந்து - 41,91,193

மேலும் செய்திகள்