குஜராத் கடல் பகுதியில் 10 பேருடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு

குஜராத் கடல் பகுதியில் 10 பேருடன் பாகிஸ்தான் படகு பிடிபட்டது.

Update: 2022-01-10 02:49 GMT
ஆமதாபாத்,

இந்திய கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் இரவு, அரபிக்கடலில் குஜராத் கடலோர பகுதியில் ‘அங்கிட்’ என்ற கப்பலில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் ஒரு படகு நுழைந்தது. அதை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தினர். அந்த படகு, ‘யாசீன்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பாகிஸ்தான் படகு ஆகும். அதில் 10 பேர் இருந்தனர். அவர்களுடன் அந்த படகையும் போர்பந்தருக்கு அழைத்து சென்றனர். அங்கு 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதியும் இதேபோல் 12 பேருடன் ஒரு பாகிஸ்தான் படகு பிடிபட்டது. கடந்த டிசம்பர் 20-ந் ேததி, ரூ.400 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு சிக்கியது.

மேலும் செய்திகள்