இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடக்கம்..!

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-10 20:31 GMT
கொழும்பு, 

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட சொகுசு ரெயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்தடம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியை, தலைநகர் கொழும்புவுடன் இணைக்கிறது. இது 386 கி.மீ. தூர வழித்தடமாகும்.

இலங்கையின் வளர்ச்சி மேம்பாட்டுக்காக இந்த திட்டத்தில் இந்தியா பெரும் பங்களிப்பு செய்துள்ளது. கடன் வசதியுடன், டீசல் எந்திர ரெயிலை வழங்கி உள்ளது.

இந்திய தூதரக அதிகாரி வினோத் கே ஜேக்கப் இந்த ரெயில் தொடக்க விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இலங்கை போக்குவரத்து துறை மந்திரி பவித்ரா வன்னியராச்சி இந்த சேவையை தொடங்கி வைத்தார். “இந்தியா இதுபோல மேலும் பல ரெயில் சேவை திட்டங்களிலும் உதவி உள்ளதாகவும், இது இந்தியாவுடனான நல்லுறவுக்கு மேலும் ஒரு அடையாளமாக உள்ளது என்றும், இந்தியாவுக்கு நன்றி என்றும்” மந்திரி கூறினார்.

மேலும் செய்திகள்