ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

ஜப்பானில் ஏற்பட்டு உள்ள கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2022-01-22 09:03 GMT


டோக்கியோ,



ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இன்று அதிகாலை 1.08 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஜப்பானின் மியாஜகி, ஒய்டா, கொச்சி மற்றும் குமமோட்டோ ஆகிய மாகாணங்களில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இவற்றில் ஒய்டா மாகாணத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர்.  மியாஜகி மாகாணத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்