அமெரிக்கா-கனடா எல்லையில் கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை

அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-01-28 18:26 GMT
வாஷிங்டன்,

கனடா எல்லை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கண்காணிக்க அமெரிக்கா பாதுகாப்பு படையினர் அமெரிக்கா-கனடா எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா, கனடா எல்லை பகுதியில் ஒரு வேனில் 15 பேரை ஏற்றி சென்றதாக ஸ்டீவ் சாந்த் (வயது 46) என்பவரை அமெரிக்கா பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். வேனில் பயணம் செய்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்றும் அவர்கள் ஏற்கனவே அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் எல்லை பகுதியில் நடந்து சென்றதாக மேலும் 5 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக கூறி அவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைதான இந்தியர்கள் கூறும்போது, “நாங்கள் கனடாவில் இருந்து நடந்து வந்த போது எங்களை சிலர் கடத்தினார்கள். சுமார் 11 மணி நேரம் அவர்கள் எங்களை நடந்தே அழைத்து சென்றனர்” என்று தெரிவித்தனர்.

வீட்டு குழந்தைகளுக்காக உடைகள் மற்றும் மருந்துகள், பொம்மைகள் வாங்கி சென்றதாகவும் அவர்கள் கூறினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கைதான 7 இந்தியர்களையும் விடுதலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்